பிறந்த நாளையொட்டி தஞ்சையில் ஜெயலலிதா படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தஞ்சையில் அவரது படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2018-02-24 22:45 GMT
தஞ்சாவூர்,

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா தஞ்சையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் இருந்து அ.தி.மு.க.வினர் ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்துக்கு பரசுராமன் எம்.பி. தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாணவரணி செயலாளர் காந்தி, பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, வக்கீல் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஊர்வலம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தவுடன் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் சாவித்திரி கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்