சரக்கு ஆட்டோ மோதி விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற சமையல்காரர் பலி
நாகூர் அருகே சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சமையல்காரர் பலியானார். இதுதொடர்பாக சரக்கு ஆட்டோ டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகூர்,
நாகை மாவட்டம் நாகூரை அடுத்த தெத்தி ஜெமியத்து நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது37). சமையல்காரர். சம்பவத்தன்று இவர் நாகையில் இருந்து நாகூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பின்னால் காடம்பாடி இளஞ்சேரன் நகரை சேர்ந்த வேதமூர்த்தி (45), மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். இவர்கள் வடக்கு பால்பண்ணைச்சேரி மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக வேதமூர்த்தி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது.
பலி
இதில் நிலைத்தடுமாறிய வேதமூர்த்தி முன்னால் சென்ற பாபுவின் மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதனால் 2 பேரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பாபு, திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கிருந்து தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாபு பரிதாபமாக உயிரிழந்தார்.
வலைவீச்சு
இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு ஆட்டோ டிரைவர் வேட்டைக்காரனிருப்பு நாச்சிக்காடு பகுதியை சேர்ந்த பிரவின்ராஜ் (23) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.