சிறுவாணி அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீரை திருப்பிவிட்ட அதிகாரிகள், கோவைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையில், கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவசர கால மதகுகளை திறந்து கேரள பகுதிக்கு தண்ணீரை திருப்பிவிட்டுள்ளனர்.
கோவை,
கோவைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணை கேரள மாநில வனப்பகுதிக்குள் உள்ளது. கோவை நகரில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த அணையில் இருந்துதான் நகருக்கு தினமும் 8 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறுவாணி அணையின் கட்டுப்பாடு கேரள பொதுப்பணித்துறையின் வசம் உள்ளது. இருமாநில ஒப்பந்த அடிப்படையில் இந்த அணையில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குடிநீர் வினியோக பணிகளை கவனிப்பதற்காக மட்டுமே இந்த அணைக்கு சென்று வருவார்கள்.
இந்த நிலையில் சிறுவாணி அணையில் திடீரென்று கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள், அவசர கால மதகுகளை திறந்து தண்ணீரை கேரளாவுக்கு திருப்பிவிட்டுள்ளனர். இந்த தண்ணீர் சிறுவாணி ஆற்றில் கலந்து, பவானி நதியுடன் இணைந்து அத்திக்கடவு என்ற இடத்தில் பில்லூர் அணைக்கு செல்ல வேண்டும்.
ஆனால் பில்லூர் அணைக்கு இந்த தண்ணீர் செல்லாத வகையில், அட்டப்பாடி பகுதியில் மணல்மூட்டைகளை வைத்து திருப்பி விட்டுள்ளனர்.
மொத்தம் 50 அடி உயரம் கொண்ட சிறுவாணியில் தற்போது, 36 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. இந்தநிலையில் கேரள பகுதிக்கு கூடுதல் தண்ணீரை திறந்துவிட்டுள்ளதால், வினாடிக்கு 60 கனஅடி வீதம் மள,மள என்று வெளியேறி வருகிறது.இதே அளவு தண்ணீர் வெளியேறினால் ஏப்ரல் முதல் வாரத்துக்குள் அணையில் இருந்து முழுவதும் தண்ணீர் வெளியேறி விடும்.
சிறுவாணி அணை கடந்த ஆண்டு வற்றியதால் கோவைக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் சிறுவாணியில் போதுமான மழை பெய்ததால் இந்த ஆண்டு ஜூலை மாதம்வரை நகருக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என்று தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நிம்மதியாக இருந்தனர்.
கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அடாவடியால், கோவை நகருக்கு ஏப்ரல் முதல் வாரம் வரை மட்டுமே சிறுவாணியில் இருந்து தண்ணீர் சப்ளை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நகருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது.
இந்தநிலையில் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கோவையில் இருந்து சிறுவாணி அணைப்பகுதிக்கு நேற்று சென்று ஆய்வு செய்தனர். அப்போது அவசரகால வழியாக, கூடுதல் தண்ணீர் வெளியேறுவதை உறுதி செய்தனர். இதுகுறித்து தமிழக அதிகாரிகள் கூறும்போது, ‘சிறுவாணி அணையில் இருந்து ஆதிவாசி குடியிருப்பு மக்களுக்காக, தினமும் வினாடிக்கு 5 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இந்தநிலையில் திடீரென்று மதகுகளை திறந்து வினாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். இதேநிலை நீடித்தால் கோவை நகருக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படும். எனவே இதுகுறித்து கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், தமிழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்று தெரிவித்தனர்.
ஏற்கனவே பில்லூர் அணைக்கு தண்ணீர் வராதவகையில், இடையில் இருக்கும் அட்டப்பாடி கேரள வனப்பகுதியில், 5 இடங்களில் சிறிய தடுப்பணைகளை கட்டி தண்ணீரை கேரள பொதுப்பணித் துறை யினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.தற்போது சிறுவாணியில் இருந்து வெளியேறும் தண்ணீரை மணல் மூட்டைகளை வைத்து, தடுப்பணை பகுதிக்கு திருப்பிவிட்டுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையிலிருந்து ஆண்டுதோறும் கேரளாவுக்கு 7.25 டி.எம்.சி.தண்ணீர் வழங்க வேண்டும் என்பது இருமாநிலங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் ஆகும்.ஒவ்வொரு வருடமும் மே மாதத்துக்குள் இந்த தண்ணீரை வழங்க வேண்டும்.இந்த ஆண்டு இதுவரை 5.50 டி.எம்.சி. தண்ணீர் குடிநீருக்கு வழங்கப்பட்டு விட்டது. தொடர்ந்து அணையில் இருந்து வினாடிக்கு 63 கன அடிதண்ணீர் சென்றுகொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆழியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் விவசாயத்துக்காக திறந்துவிடக்கோரி கேரள விவசாயிகள் பொள்ளாச்சி அருகே கேரள எல்லையில் தமிழக வாகனங்களை மறித்து தங்களது மாநிலத்துக்குள் வராதபடி தடையை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சிறுவாணி அணையிலிருந்து கேரளாவுக்கு அடாவடியாக தண்ணீரை திருப்பிவிட்டு இருப்பது இருமாநிலங்களுக்கு இடையே பதற்றத்தை ஏற் படுத்தி உள்ளது.