திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தொழில் திறன் பயிற்சி வகுப்பில் சேர குறைந்த இடங்களே உள்ளன
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தொழில் திறன் பயிற்சி வகுப்புகளில் சேர குறைந்த இடங்களே உள்ளன.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தொழில் திறன் பயிற்சி வகுப்புகளில் சேர குறைந்த இடங்களே உள்ளன. ஆர்வம் உள்ள இளைஞர்கள் பதிவு செய்ய நாளை மறுநாள் கடைசி நாளாகும்.
தொழில் திறன் பயிற்சி
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, ஏழை– எளிய மாணவர்களின் கல்வி தகுதியை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதில் ஒருபடி மேலாக பள்ளி படிப்பை முடித்த, முடிக்காத ஏழை மக்களுக்காக மற்றொரு பாதையை உருவாக்கி தரும்பொருட்டு திறன் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
இந்திய அரசு வேலையின்மையை போக்கும் வகையில் பல்வேறு மனித திறன் மேம்பாட்டு பயிற்சிகளை, பல திட்டங்களின் மூலம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இப்பயிற்சிகளின் மூலமாக இந்திய மனித வளத்தை உலக தரத்துக்கு மேம்படுத்த தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆரம்பக்கல்வி, உயர்கல்வி தகுதிகளோடும், படிப்பை தொடர முடியாமல், வேலைவாய்ப்பு இன்மையால் தங்களது வாழ்வாதாரம் தேடும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி வகுப்புகளை இந்திய அரசு தனது திறன் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக பயிற்சி அளிக்கிறது.
அடுத்த மாதம் 3–ந் தேதி
குறிப்பாக இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் ஆய்வின்படி 2022–ம் ஆண்டில் 109 மில்லியன் திறமையான நபர்கள் தேவைப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்ய பிரதம மந்திரியின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திறன் சார்ந்த பயிற்சி வகுப்புகள் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்துக்கு தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த வகுப்புகள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் அடுத்த மாதம் (மார்ச்) 3–ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும். மேலும் இந்த பயிற்சிக்கு வயது வரம்பு எதுவும் இல்லை.
பயிற்சி வகுப்புகள்
இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகளும், அதற்கான அடிப்படை தகுதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:–
1.கட்டுமான துறையில் உதவி நிலம் அளப்பவர், கல்வி தகுதி 5–ம் வகுப்பு.
2.மின்னனு துறையில் செட்டாப் பாக்ஸ் அமைத்தல், அடிப்படை கல்வி தகுதி 10–ம் வகுப்பு.
3.மின்னனு துறையில் எல்.இ.டி. மின்விளக்கு பழுது பார்த்தல், அடிப்படை கல்வி தகுதி ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
4.வாகன துறையில் லேத் ஆபரேட்டர், அடிப்படை கல்வி தகுதி 8–ம் வகுப்பு.
நாளை கடைசி நாள்
மேற்கண்ட தகுதிகள் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடந்து வருகிறது. முற்றிலும் இலவசமாக இந்த வகுப்புகள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கற்றுக் கொடுக்கப்படும். பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்புகளில் சேர இன்னும் ஒருசில இடங்களே உள்ளன.
எனவே, மேற்கூறிய அடிப்படை தகுதிகள் உள்ளவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது ஆதார் கார்டு நகல், கல்வி தகுதி சான்றிதழ் நகல், சாதி சான்றிதழ் நகல், புகைப்படம் ஒன்று என இவைகளுடன் நேரில் வந்து தங்கள் பதிவை உறுதி செய்து கொள்ளலாம். நேரில் வந்து பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகும்.
இந்த தகவலை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் ஞா.ஒய்ஸ்லின் ஜிஜி தெரிவித்துள்ளார்.