ரட்சணிய சேனை மாகாண ஊழியர் பொதுக்கூட்டம்

நாகர்கோவிலில் நடந்த ரட்சணிய சேனை மாகாண ஊழியர் பொதுக்கூட்டத்தில் அகில உலக தலைவர் அன்ரிகாக்ஸ் பங்கேற்றார்.

Update: 2018-02-23 23:14 GMT
நாகர்கோவில்,

ரட்சணிய சேனையின் அகில உலக தலைவர் அன்ரிகாக்ஸ் குமரி மாவட்டம் வந்தார். இவர் வருகையையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாகாண ஊழியர்கள் பொதுக்கூட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் நேற்று நடந்தது. இதில் அகில உலக தலைவர் அன்ரிகாக்ஸ் பங்கேற்று பேசினார். இவருடைய மனைவி சில்வியா காக்ஸ், மாகாண தளபதி கபரியேல் கிறிஸ்டியன், மகளிர் பிரிவு தலைவி இந்துமதி கிறிஸ்டியன் உள்ளிட்டோரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக அகில உலக தலைவர் அன்ரிகாக்ஸ் மற்றும் அவருடைய மனைவி சில்வியா காக்ஸ் ஆகியோரை வரவேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ரட்சணிய சேனை ஊழியர்கள் பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இன்று (சனிக்கிழமை) காலை வெட்டூர்ணிமடம் மாகாண தலைமை அலுவலக ஊழியர்கள் இல்லம் திறப்பு விழா நடக்கிறது. இந்த இல்லத்தை அகில உலக தலைவர் அன்ரிகாக்ஸ் திறந்து வைக்கிறார். அதன் பின்னர் மாலையில் இளைஞர் விழா நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) தக்கலையில் புதிய ஆலயத்தையும், இறச்சகுளத்தில் போதகர் இல்லத்தையும் அவர் திறந்து வைத்து பேசுகிறார்.

26-ந் தேதி ரட்சணிய சேனை சுயஉதவிக்குழுக்கள் சார்பில் பெருமாள் மண்டபத்தில் நடைபெறும் விழாவிலும் அவர், தன் மனைவியுடன் பங்கேற்கிறார்.

மேலும் செய்திகள்