தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்
பேரூராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பேரூராட்சிகளில் உள்ளாட்சி பணியாளர் சங்கத்தின் சார்பில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க பெயர்பலகை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜெயராமன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளாட்சி பணியாளர் சங்கத்தின் தொழிற்சங்க பெயர் பலகையை திறந்து வைத்தனர்.
விழாவில் பேரூராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேல் தினக்கூலி பணியாளர்களாக பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பேரூராட்சியில் குப்பை வண்டி ஓட்டும் ஓட்டுனர்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். தினக்கூலி பணியாளர்களுக்கு நிரந்தர பணிபாதுகாப்பு வழங்க வேண்டும், பூலாம்பாடி, குரும்பலூர் பேரூராட்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வருடத்திற்கு 2 ஜோடி சீருடைகள், முககவசம், காலணிகள், கையுறைகள் மற்றும் சுகாதார உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட கவுரவ தலைவர் தங்கவேல், செயலாளர் அன்வர்பாஷா, பொருளாளர் செல்வகுமார் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அரும்பாவூர் சங்க தலைவர் மகேந்திரன் வரவேற்று பேசினார். முடிவில் நிரேஷ் நன்றி கூறினார்.