சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து தலைவி பா.ஜனதாவில் இருந்து இடைநீக்கம்
கட்சியின் விதிமுறைகளை மீறியதாக சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து தலைவி சைத்ராஸ்ரீயை பா.ஜனதாவில் இருந்து இடைநீக்கம் செய்து மாநில செயலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் சைத்ராஸ்ரீ. ஆதிதிராவிட பிரிவை சேர்ந்த இவர், கடந்த 2015-ம் ஆண்டு பா.ஜனதா கட்சி சார்பில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, சைத்ராஸ்ரீயிடம் 2½ ஆண்டுகள் தலைவியாக பதவி வகித்துவிட்டு, அதேக்கட்சியை சேர்ந்த வேறொருவருக்கு அதனை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்கு அவரும் சம்மதித்ததாக தெரிகிறது.
அவர், சிக்கமகளூரு மாவட்டத்தில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை செய்து வந்துள்ளார். அவர் செய்த வளர்ச்சி பணிகளுக்கு பிரதமர் மோடியே பாராட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2½ ஆண்டுகள் முடிந்தும் அவர் பதவி விலகவில்லை. இதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது, அவர் பதவி விலக மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பா.ஜனதா கட்சியை சேர்ந்த சி.டி.ரவி எம்.எல்.ஏ., ஷோபா எம்.பி. ஆகியோர் சைத்ராஸ்ரீக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவர், கட்சி விதிமுறைகளை மீறிவிட்டதாக கட்சி மேலிடத்தில் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக மாநில பா.ஜனதா செயலாளர் ரவிக்குமார் விசாரணை நடத்தினார். அப்போது அவர், கட்சி விதிமுறைகளை மீறி நடந்து கொண்டது தெரியவந்தது. இதனால், சைத்ராஸ்ரீயை பா.ஜனதா கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்து அவர் அதிரடி உத்தரவிட்டார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், லிங்காயத் சமுதாய மக்களின் வாக்குகளை கவருவதற்காக பா.ஜனதாவினர் சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை அந்த சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒதுக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த சைத்ராஸ்ரீ மறுத்துள்ளதால், அவர் மீது கட்சி விதிமுறை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.