பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பொன்.ராதாகிருஷ்ணன் ஆலோசனை
புதுச்சேரிக்கு 25-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி வர இருப்பதையொட்டி பா.ஜ.க. நிர்வாகிகளுடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி,
ஆரோவில் பொன்விழாவில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரிக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகிற 25-ந்தேதி வருகிறார். அரவிந்தர் ஆசிரமத்துக்கு செல்லும் பிரதமர் பிற்பகலில் லாஸ்பேட்டை மைதானத்தில் நடக்கும் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதுகுறித்த ஏற்பாடுகளை கவனிக்க மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று புதுவைக்கு வந்தார். புதுவையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களான மாநில தலைவர் சாமிநாதன், சங்கர், செல்வ கணபதி மற்றும் ஏம்பலம் செல்வம், தங்க.விக்ரமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது பிரதமருக்கு வரவேற்பு அளிப்பது, பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு வந்து இருந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி 25-ந்தேதி புதுச்சேரிக்கு வர உள்ளார். ஆரோவில் பொன்விழாவில் கலந்துகொள்கிறார். பிற்பகலில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் லாஸ்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி கட்சியின் பொறுப்பில் இருந்தபோது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி வந்துள்ளார். அதன்பின் இப்போதுதான் வருகிறார். பிரதமரின் வருகை ஒட்டுமொத்த புதுச்சேரி மாநில மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் வருகைக்குப்பின் புதுவை மிகப்பெரிய வளர்ச்சியை அடையும். இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம், ‘புதுவை பாரதீய ஜனதா தலைவர் பிரதமர் வருகைக்குப்பின் அரசியல் மாற்றம் இருக்கும் என்று கூறியுள்ளாரே? என்று கேட்டதற்கு, எங்கள் கட்சி தலைவர் கூறினால் நூற்றுக்கு நூறு சரியாகத்தான் இருக்கும். அவர் கூறியது பல விஷயத்துக்கு பொருந்தும்’ என்றார்.
முன்னதாக பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டு, மோடி வருகை குறித்து ஆலோசனை நடத்தினர்.