குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
புயல் பாதிப்புக்கு குறைவான நிவாரணம் வழங்குவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டினர். அப்போது விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) புருஷோத்தமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேத அருள்சேகர், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் அசோக் மேக்ரின் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணபாலன் (நீர்வள ஆதாரம்) உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகளும், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் பேசியதாவது:–
குமரி மாவட்டத்தில் இதற்கு முன்பு நெல் அறுவடை காலங்களில் நெல் கொள்முதல் மையம் அமைத்து அரசு நேரடியாக விவசாயிகளிடம் நெல் மூடைகளை கொள்முதல் செய்து வந்தது. இதனால் நெல்லுக்கு உரிய ஆதார விலையை பெற்று விவசாயிகள் லாபம் அடைந்து வந்தனர். ஆனால், தற்போது விவசாயிகளிடமிருந்து நெல்லை அரசு நேரடியாக கொள்முதல் செய்வதில்லை. மாறாக வியாபாரிகள் மற்றும் தரகர்கள் மூலமாக நெல் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. நஷ்டமே ஏற்படுகிறது.
எனவே, மாவட்டத்தில் நெல் கொள்முதல் மையம் அமைத்து விவசாயிகளிடமிருந்து நெல்லை அரசு நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும். இதுபோல், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாங்கியுள்ள விவசாய கடன்களை கட்ட வலியுறுத்தி தொந்தரவு செய்யக்கூடாது என அரசு அறிவித்திருக்கும் நிலையில், விவசாயிகளை கட்டாயப்படுத்தி கடனை உடனடியாக செலுத்த அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். தோவாளை மலர் வணிக வளாகத்தில் கடை ஒதுக்கீடு மற்றும் வடசேரி கனகமூலம் சந்தையில் கடைஒதுக்கீடு போன்றவற்றில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்.
ஒகி புயலின் போது குமரி மாவட்டத்தில் வேளாண் பயிர்களும், தோட்டக்கலை பயிர்களும் கடுமையாக சேதமடைந்தன. இதற்கு அரசு நிவாரணம் அறிவித்து வழங்கி வருகிறது. ஆனால், புயல் நிவாரணமாக விவசாயிகள் கேட்ட தொகையும், அரசு அறிவித்த நிவாரணத்தொகைக்கும் மாறுபாடு உள்ளது. இந்தநிலையில் தற்போது அரசு வழங்கும் நிவாரண தொகையானது, ஏற்கனவே அறிவித்த தொகையை காட்டிலும் மிகக்குறைவாக உள்ளது. இதுபோல் வாழை, தென்னை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு அறிவித்த நிவாரண தொகையில் 100–ல் 1 சதவீதம் கூட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இதை எல்லாம் பார்க்கும் போது பக்கத்து மாநிலமான கேரளாவோடு சேர்ந்து விடலாம் என்றே நினைக்க தோன்றுகிறது. இனி மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சரியான முறையில் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படாவிட்டால் மனித உரிமை கமிஷனில் புகார் அளிப்போம். இதே கோரிக்கையை பலரும் வலியுறுத்தி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களின் கால்நடைகளை மேய்ச்சலுக்காக மலையடிவாரங்களுக்கு அழைத்து செல்வது வழக்கம். ஆனால், வனப்பகுதி எனக்கூறி தற்போது விவசாயிகளை மேய்ச்சலுக்கு வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. வனப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை கால்நடை மேய்ச்சலுக்காக பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் செம்பு பட்டயம் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் விவசாயத்துக்கு அடிப்படையாக விளங்கும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக மலையடிவார பகுதியில் அனுமதிக்க மறுப்பது வருந்தத்தக்கது. இதுகுறித்து ஏற்கனவே கடந்த முறை நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அதிகாரிகள் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் மாற்றுவழியாக கால்நடைகளுடன் வனப்பகுதிக்குள் புகுந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ பதிலளித்து பேசுகையில், விவசாயிகள் மீது கவனம் செலுத்தி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் பெற்றுத்தர அரசுக்கு கோரிக்கை அனுப்பப்படும் என்றார்.
மேலும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் குணபாலன் பேசுகையில், குமரி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 992 எக்டர் பரப்பில் கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆயிரம் எக்டருக்கு மேல் அறுவடை நடைபெற்றுள்ளது. நெல் அறுவடை முடிந்ததும் அந்த நிலத்தில் விவசாயிகள் உளுந்து பயிரிட வேண்டும். உளுந்து விதைகள் மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில் தயார் நிலையில் உள்ளன. மேலும் நெட்டை, குட்டை தென்னை ரகங்களும் உள்ளன. அவற்றை வாங்கி விவசாயிகள் பயிரிடுவதன் மூலம் நல்ல மகசூலும், லாபமும் பெற முடியும். விவசாயிகளின் நலன் தொடர்பாக அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றார்.
மலையோர பகுதி விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக மாவட்ட வன அலுவலர் தலைமையில் விவசாயிகள் அடங்கிய கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.