புகைப்படத்திற்கு தடை!

பெர்கன் பிராகன் கிராமத்தில், இயற்கை அதிசயங்களை புகைப்படம் எடுப்பதற்கும், வீடியோ எடுப்பதற்கும் தடை விதித்திருக்கிறார்கள்.

Update: 2018-02-22 22:15 GMT
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் இருக்கும் பெர்கன் பிராகன், ஐரோப்பாவிலேயே மிக அழகான கிராமம். இந்தக் கிராமத்தின் எந்தத் திசையில் திரும்பினாலும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. பனி போர்த்திய மலை உச்சிகள், அருவிகள், மஞ்சள் பூக்கள் நிறைந்த பள்ளத்தாக்குகள், அழகிய பழங்காலக் கோட்டைகள், வீடுகள், ரெயில் நிலையம் என்று எதைப் பார்ப்பது, எதை விடுவது என்ற குழப்பம் நமக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இவ்வளவு இருந்தும் இந்த கிராமத்தில் சிதறிக் கிடக்கும் இயற்கை அதிசயங்களை புகைப்படம் எடுப்பதற்கும், வீடியோ எடுப்பதற்கும் தடை விதித்திருக்கிறார்கள். அதற்கு நல்ல காரணத்தையும் வைத்திருக்கிறார்கள்.

“எங்கள் அழகிய கிராமத்தைப் பார்க்க வேண்டுமென்றால், நேரில் வாருங்கள். அதைவிட்டுவிட்டு, கையில் இருக்கும் ஸ்மார்ட் போன்களை வைத்து கண்டபடி புகைப்படம் எடுத்து அழகான கிராமத்தை அசிங்கப்படுத்தாதீர்கள். ஸ்மார்ட் போன் வந்த பிறகு நல்ல புகைப்படங்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. முறையில்லாமல் எடுக்கும் புகைப் படங்கள், கிராமத்தின் அழகைக் குறைத்துக் காட்டிவிடுகின்றன. அதனால்தான் இப்படி ஒரு சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். கட்டுப்பாடும், கட்டணமும் இருந்தால்தான் நேர்த்தியாகப் படம் எடுப்பார்கள். நாங்கள் ரசிக்கும் அழகை உலக மக்களும் ரசிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் வரலாம். அனுமதியோடு புகைப்படங்கள் எடுக்கலாம். அந்த அனுமதி, நன்கு புகைப்படம் எடுக்கத் தெரிந்தப் புகைப்பட கலைஞர்களுக்கு மட்டுமே” என்கிறது பிராகன் சுற்றுலாத்துறை. 

மேலும் செய்திகள்