கர்நாடகத்தில் 96 சதவீதம் பேருக்கு ஆதார் எண்
கர்நாடக சட்டசபையில் நேற்று பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித்துறை மந்திரி எச்.கே.பட்டீல் கர்நாடக ஆதார் சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
பெங்களூரு,
மந்திரி எச்.கே.பட்டீல் பேசுகையில், "மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகளுக்கு ஆதார் எண்ணை வழங்கும் நோக்கத்தில் அவர்களின் வீட்டுக்கே ஆதார் பதிவு சாதனங்களை எடுத்துச் சென்று விவரங்கள் பெறப்படும். அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயப்படுத்த இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடகத்தில் இதுவரை 96 சதவீதம் பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 சதவீதம் பேருக்கும் ஆதார் பதிவு எண் விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.