தமிழன்னை சிலைக்கு, பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதை

மக்கள் தங்கள் தாய்மொழிகளை போற்றி வளர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் யுனெஸ்கோ அமைப்பானது பிப்ரவரி 21-ந் தேதியை உலக தாய்மொழி நாளாக அறிவித்துள்ளது. அதன்படி நேற்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2018-02-21 22:21 GMT
நாகர்கோவில்,

இதையொட்டி நாகர்கோவிலில் உள்ள மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனின் முகாம் அலுவலகத்தில் தாய்மொழி தின நிகழ்ச்சி நடந்தது. அங்கிருந்த தமிழன்னை சிலைக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துக்கிருஷ்ணன், முன்னாள் நகரசபை தலைவர் மீனாதேவ், நிர்வாகிகள் தர்மபுரம் கணேசன், தேவ், ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் வடசேரி புளியடியில் அமைக்கப்பட்டு வரும் மின்மயான மேம்பாட்டு பணிகளுக்கு கூடுதல் நிதியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஒதுக்கியுள்ளார். அதுதொடர்பாக அவர் நாகர்கோவில் நகராட்சி என்ஜினீயர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தனது அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

நாகர்கோவில் நகராட்சி நிதியில் இருந்து மின்மயான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தப்பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் அம்ருத் திட்டத்தில் ரூ.98 லட்சம் செலவில் அங்கு பூங்கா அமைக்க பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் அங்கு கழிப்பிட வசதி, தியான மையம் உள்ளிட்டவை அமைக்க மத்திய அரசின் சிறப்பு நிதியில் இருந்து கூடுதலாக ரூ.1 கோடியை அவர் ஒதுக்கி இருக்கிறார். இதற்கான வரைபடத்தை பொன்.ராதாகிருஷ்ணனிடம், நகராட்சி என்ஜினீயர் சுரேஷ்குமார் காண்பித்து விளக்கம் அளித்தார்.

மேலும் செய்திகள்