திருப்பூர் போயம்பாளையத்தில் குறைந்த மின் அழுத்தம் மின்சாதனப்பொருட்கள் எரிந்ததாக கூறி மின்வாரிய அலுவலகம் முற்றுகை
திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதால் வீடுகளில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக டி.வி., மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து விட்டதாக கூறி மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் 20–வது வார்டுக்குட்பட்ட போயம்பாளையம் சக்திநகரில் ஒரு மின்மாற்றி உள்ளது. அந்த மின்மாற்றியில் இருந்து அந்த பகுதியில் 3 வீதிகளில் உள்ள 200–க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த 16–ந்தேதி அந்த மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதுடன், மின்சாரம் சீராக செல்லவில்லை. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் 2 முறை புகார் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அந்த மின்மாற்றியில் பழுது சரிசெய்யப்படவில்லை.
இந்த நிலையில் அங்குள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள டி.வி., மோட்டார் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்கள் எரிந்து விட்டதாக கூறி அந்த பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 20–வது வார்டு செயலாளர் சசி தலைமையில் நேற்று மதியம் ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் இதுதொடர்பாக அங்கு பணியில் இருந்த மின்வாரிய உதவி பொறியாளர் துரைபாண்டியிடம் மனு கொடுத்தனர். அப்போது அவர் பொதுமக்களிடம், மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது தொடர்பான தகவல் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. எனவே உடனடியாக மின்மாற்றியில் உள்ள பழுதை நீக்கவும், அந்த பகுதிக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.