இனி ஊழலை வேடிக்கை பார்க்க மாட்டோம்: மதுரை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேச்சு
இனி ஊழலை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று மதுரை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.
மதுரை,
மதுரை ஒத்தக்கடையில் நேற்று நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-
37 ஆண்டுகளாக பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டு வந்த நாங்கள் தற்போது மக்கள் பணியாற்ற வந்திருக்கிறோம். நிறைய பேர் எங்களை கேலி செய்கிறார்கள். அவர்களைப் பார்த்து நான் சொல்லிக் கொள்கிறேன். எங்கள் தண்டவாளமும், உங்கள் வண்டவாளமும் இனி வெளிவரும். இன்று அறிமுக நாள் என்பதால் பேச மட்டும்தான் வந்திருக்கிறேன் என்று நான் நினைத்தேன். ஆனால் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலோ எனக்காக பிரசாரத்தையே தொடங்கி வைத்து விட்டார், இங்கேயே எனது நேரமின்மை அவருக்கும் தெரியும். எத்தனை காலம் தான் இங்கு நடக்கும் அநியாயங்களை பார்த்துக் கொண்டிருப்பது? ஊமைகளாய் கனவு கண்டு கொண்டிருப்போம். இன்று பேசும் நாள். நாளை முதல் செயல்படுவோம். நேற்று மாலை சந்திரபாபு நாயுடுவிடம் பேசினேன். அப்போது அவர் மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுங்கள். சித்தாந்தம் எல்லாம் மாயாஜாலம் என்றார். இஸம் என்பது கருவி மட்டுமே என்றார். மக்கள் நலன்தான் கொள்கை கோட்பாடு என்று எனக்கு அவர் அறிவுறுத்தினார். அவர் அப்படி கூறியதன் பின் நான் நல்ல வழியில்தான் செல்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். அதன் பிறகு நேற்று இரவு நிம்மதியாக தூங்கினேன். சந்திரபாபு நாயுடு சொல்லியதையே இன்று மேடையில் கெஜ்ரிவாலும் வலியுறுத்தி இருக்கிறார்.
இங்கு பணத்துக்கு பஞ்சம் இல்லை. மனதுக்குத்தான் பஞ்சம். அதைப் போக்கும் கூட்டம், இந்த கூட்டம். நான் தலைவன் இல்லை. தொண்டன்தான். அப்படித்தான் இருக்க வேண்டும். நீங்கள் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும். இது இந்த தமிழனின் உத்தரவு. நம் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகளாக அனைத்து தரப்பினருக்கும் நல்ல தரமான கல்வியை அளிப்பது. சாதி, மதத்தை சொல்லி விளையாடுவதை நிறுத்த வேண்டும். ஊழலை ஒழித்தல் என்பது போன்ற நிறைய அம்சங்கள் இருக்கின்றன. இதுவே இந்தக் கூட்டத்தில் சொல்ல போதுமானது.
இவ்வளவு நேரம் தான் மின்சாரம் வரும் அட்ஜஸ்ட் செய்யுங்கள் என்று சொல்வார்கள். நீங்கள் ஊழலை ஒழித்தால் கணக்கில்லாத மின்சாரம் கிடைக்கும். இவ்வளவு காலம் ஆட்சியாளர்களின் ஊழலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். இனி அதை செய்யக் கூடாது. மற்றவர்களைப் போல ஓட்டுக்கு பணம் கொடுப்பீர்களா என்று கேட்கலாம். என்னிடம் பணம் இல்லை. இருந்தாலும் நான் கொடுக்க மாட்டேன். உங்கள் ஓட்டின் வலிமை உங்களுக்குத் தெரிய வில்லை. அடிமாட்டு விலைக்கு விற்று விடுகிறீர்கள். நல்லவர்களுக்கு ஓட்டு போட்டால் ரூ.6 லட்சம் வரை உங்களுக்கு கிடைக்கலாம். நீங்கள் குறைகளை உரியவரிடம் சொன்னால் சும்மாவா ஓட்டு போட்டீர்கள் என்று கேட்பார்கள். அவர்களைப் பார்த்து நீங்கள் ஓடாதீர்கள். நின்று, நிதானமாக அவர்களை திரும்பிப் பாருங்கள். நீங்கள் திருப்பிக் கேட்டால் நாடு என்னவாகும்?
படித்த ஏராளமானோர் வேலை இன்றி இருக்கின்றனர். உங்கள் திறமையை வளர்த்துக் கொண்டால் சாதிக்கலாம்.
8 கிராமங்களை முன்னுதாரணமாக தத்தெடுத்து உள்ளோம். இதை பலர் கேலி செய்கிறார்கள். எங்களது செயல்பாடுகளில் குறை இருந்தால் எடுத்துக் கூறுங்கள். திருத்திக் கொள்வோம்.
அதே போல் காவிரி பிரச்சினைக்கு எனது பதில் என்ன என்று கேட்கிறார்கள். அதை நான் எப்போதோ சொல்லி விட்டேன். முறையான உரையாடல் நடந்தால் தண்ணீர் என்ன ரத்தத்தையும் பெற முடியும். ரத்தம் என்றால் நீங்கள் வன்முறை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ரத்த தானத்தை சொல்கிறேன்.
நல்ல அறிவுரைகளை எடுத்து கையாண்டு மக்களுக்கு நல்லது செய்வோம். இந்த இயக்கம் எனக்காக மட்டும் உருவாக்கப்படாமல் 4 தலைமுறையினரை மனதில் வைத்து கட்டமைக்கப்பட்டு உள்ளது. எனக்கு 63 வயதாகி விட்டது. ஆயுள் குறைவாகத்தான் உள்ளது என்று கிண்டல் அடிக்கிறார்கள். நான் காசு வாங்கிக் கொண்டு சினிமாவில் நடித்தேன். அதை பார்த்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். உங்களின் காசில் நான் சொகுசு காரில் வலம் வந்தேன். உங்களுக்காக ஒன்றுமே செய்ய வில்லையே என்ற குற்ற உணர்வு என்னிடம் இருந்தது. இதை தனியாக இருந்து யோசித்து முடிவு செய்தேன். மீதி இருக்கும் நாட்களை உங்களுக்காக செலவிட வந்திருக்கிறேன். அதனால்தான் இவ்வளவு அவசரம்.
எனக்காக மட்டுமே நான் கட்சியை தொடங்கினால் நாளை நமதாகுமா? காந்தி சொன்னார். நமக்கு தேவையான எல்லாமே நமது நாட்டில் இருக்கிறது. பேராசை ஒன்று இருந்தால் அவை அனைத்தையும் அழித்து விடும். பேராசைப்படாமல் தேவையானவற்றை பெற கடுமையாக உழைப்போம். எனவே உழைப்பை தாருங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஊழலுக்கு ஒத்துழைக்காமல் இருங்கள். இங்கே பள்ளிகள் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு உள்ளன.
ஆனால் சாராய வியாபாரத்தை அரசு கையில் எடுத்துள்ளது. பள்ளிப் பருவத்திலேயே மது குடிக்கும் அளவுக்கு இன்றைய சூழ்நிலை உள்ளது. அதை மாற்ற வேண்டும். இந்த மேடை அறிவுரை கூறும் மேடை அல்ல. அறிவு பெறும் மேடை. உங்களிடம் நிறைய கேள்விகள் இருக்கும். அதனை நிதானமாக கேளுங்கள். பதில் சொல்கிறேன். இல்லையென்றால் கடிதம் மூலம் கண்டிப்பாக பதில் கூறுவேன்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.