“பாவத்தை தொலைக்கவே கமல்ஹாசன் ராமேசுவரம் சென்றுள்ளார்” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு
பாவத்தை தொலைக்கவே நடிகர் கமல்ஹாசன் ராமேசுவரம் சென்றுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கிப் பேசினார்.
மதுரை,
மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்ணாநகரில் நடந்தது.
விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காட்டிய வழியில் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழ்நாட்டின் மீதான உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. இன்றைக்கு ஒருவர் புதிய கட்சி தொடங்கப் போவதாக கூறி ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். ராமேசுவரத்திற்கு எல்லோரும் கடைசி காலத்தில் செய்த பாவத்தை போக்க செல்வார்கள். அவரும் அதற்காகத் தான் சென்றுள்ளார். மாலையில் மதுரைக்கு வருவதாக தெரிவித்துள்ளார். அவர் மதுரைக்கு வரட்டும். இங்கு கட்சிக்கும், கொடிக்கும், கொள்கைக்கும் பஞ்சமில்லை.
அரசியலுக்கு வருபவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரும். ஜெயலலிதாவும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மக்கள் சேவை செய்தனர். நாட்டின் பல்வேறு பிரச்சினைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். புதிய கட்சி தொடங்கும் இவர் என்ன சேவை செய்தார் என்பது மக்களுக்கு தெரியும். இந்த அரசு ஏழைகளுக்கான அரசு. மக்களுக்கான அரசு. அ.தி.மு.க. ஆட்சியை காக்க மக்கள் என்றும் துணை நிற்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.