குழந்தைகள் வருகைக்கு காத்திருந்த செவிலியர்கள்: வைட்டமின் ‘ஏ’ திரவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை
மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்படுவது குறித்து போதிய விழிப்புணர்வு செய்யாததால் மருந்து கொடுக்க யாரும் வரவில்லை.
மானாமதுரை,
தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் 5 மாத குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வரை வைட்டமின் ‘ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு மாலைக்கண் நோய் உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான முக்கிய தடுப்பு மருந்தாக இது வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 2 முறை இந்த மருந்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்க கடந்த 19-ந்தேதி முதல் வருகிற 24-ந்தேதி வரை முகாம் அமைத்து வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 975 குழந்தைகளுக்கு இந்த திரவம் வழங்கப்பட உள்ளது.
ஆனால் போலியோ சொட்டு மருந்து போன்று போதிய விழிப்புணர்வு இல்லாததால் வைட்டமின் ‘ஏ’ திரவத்தை பொதுமக்கள் பலரும் தங்களது குழந்தைகளுக்கு கொடுக்க முன்வரவில்லை. பல இடங்களில் குழந்தைகளை பெற்றோர் அழைத்துவரவில்லை. இதனால் காலை முதல் இரவு வரை குழந்தைகள் வருகைக்காக செவிலியர்கள் காத்திருந்தனர். போதிய குழந்தைகள் வரவில்லை என்பதே இதற்கு காரணம்.
செவிலியர்கள் பலரும் காலை முதல் மாலை வரை திரவம் வழங்க காத்திருந்தனர். இதுகுறித்து விளம்பர போர்டு கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. திரவம் வழங்கும் பகுதியை கடந்த பொதுமக்கள் பலரும் யாரோ அமர்ந்துள்ளனர் என்று கருதி இடத்தை காலி செய்தனர்.
எனவே சுகாதாரத்துறை வரும் காலங்களிலாவது வைட்டமின் ‘ஏ‘ திரவம் குறித்து போதிய விழிப்புணர்வு செய்து பொதுமக்கள் தங்களது குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ‘ திரவம் கொடுக்கும்படி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.