கோ–ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை கலெக்டர் தொடங்கி வைத்தார்

தீபம் கோ–ஆப்டெக்சில் ‘2 சேலை வாங்கினால் ஒன்று இலவசம்’ சிறப்பு விற்பனை தொடக்க விழா நேற்று நடந்தது.

Update: 2018-02-21 22:30 GMT

வேலூர்,

வேலூர் சாரதி மாளிகையில் உள்ள தீபம் கோ–ஆப்டெக்சில் ‘2 சேலை வாங்கினால் ஒன்று இலவசம்’ சிறப்பு விற்பனை தொடக்கவிழா நேற்று நடந்தது. வேலூர் மண்டல மேலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் மேலாளர் சேகர் வரவேற்றார். சிறப்பு விற்பனையை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விற்பனை அடுத்த மாதம் (மார்ச்) 31–ந் தேதி வரை உள்ளது. அனைத்து விடுமுறை நாட்களிலும் கடை இயங்கும். ஒரே ரக துணி வாங்கினால் 20 சதவீதம் தள்ளுபடியும், கனவு நனவு திட்டத்தில் தவணை முறையில் பணம் செலுத்தினால் 30 சதவீதம் தள்ளுபடியும் உண்டு என கோ–ஆப்டெக்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்