விவசாயிகளிடம் பணம் வசூலித்தால் நடவடிக்கை
நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுரேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாகை மாவட்டத்தில் தற்போது பல்வேறு இடங்களில் சம்பா நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு தேவையான அளவு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் நாகை மண்டலம் சார்பில் நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நேரடி நெல் கொள் முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக நெல் கொண்டு வரும் விவசாயிகளிடம் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் யாரும் பணம் வசூலிக்கக்கூடாது. இதை மீறி பணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.