பானிபூரி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
பானிபூரியில் பான்மசாலா கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது.
வேலூர்,
பானிபூரியில் பான்மசாலா கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தது. அதைத் தொடர்ந்து கடைகளில் சோதனை நடத்த உணவுபாதுகாப்புத்துறை கமிஷனர் அமுதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் பானிபூரி கடைகளில் அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உணவுபாதுகாப்பு நியமன அலுவலர் வெங்கடேசன் உத்தரவின்பேரில் உணவுபாதுகாப்பு அதிகாரிகள் நேற்று பானிபூரி கடைகளில் ஆய்வு செய்து அங்கு விற்பனைசெய்யப்படும் பொருட்களை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். வேலூரிலும் உணவுபாதுகாப்பு அலுவலர்கள் கவுரிசுந்தர், நாகேஸ்வரன் ஆகியோர் பானிபூரி மற்றும் தள்ளுவண்டிகடைகளில் ஆய்வு செய்தனர்.