நடிகர் கமல்ஹாசன் அரசியல் பிரவேசத்தால் எந்த கட்சிக்கும் பாதிப்பு இல்லை மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
நடிகர் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் செய்வதால், எந்த கட்சிக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருச்செந்தூர்,
நடிகர் கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் செய்வதால், எந்த கட்சிக்கும் பாதிப்பு இல்லை என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று மாலையில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள்
இந்திய குடியுரிமையும், வாக்களிக்க தகுதி உடைய எவரும் அரசியல் கட்சியை தொடங்கலாம். நடிகர் கமல்ஹாசன் 40 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படைத்துறையில் பணிபுரிந்து வருகிறார். அவர் தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்து உள்ளார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவர் அரசியல் கட்சி தொடங்குவதால் எந்த கட்சிக்கும் பாதிப்பு இல்லை.
திராவிடம் என்று கூறி இனி யாரும் ஏமாற்ற முடியாது. இந்தியாவின் ஒரு பகுதிதான் திராவிடம். திராவிடம் முடிந்துபோன சரித்திரம். இனி தமிழகத்துக்கு தமிழர்களுக்கு என்ன செய்ய போகிறோம்? என்பதுதான் முக்கியம்.
கிழக்கு கடற்கரை சாலை
சென்னை, எண்ணூர், தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களை தொடங்கியபோது மீன்பிடி தொழில் பாதிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் மீன்பிடி தொழில் பாதிக்காத வகையில் அந்த துறைமுகங்கள் சிறப்பாக செயல்படுகிறது. அதேபோன்று கேரள மாநிலம் விழிஞத்தில் துறைமுகம் தொடங்க திட்டமிட்டபோது, அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்த துறைமுகம் தமிழகத்துக்கு மாற்றப்பட்டபோது, அந்த துறைமுகத்தை மறுபடியும் கேரள மாநிலத்திலேயே தொடங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழகத்தில் நல்ல திட்டங்கள் நிறைவேற்றப்படக் கூடாது என்று கருதி சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு எப்போதும் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களையே செயல்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் இணயத்தில் சர்வதேச தரம் வாய்ந்த துறைமுகம் அமைக்க சர்வே பணிகள் நடைபெற்று வருகிறது. நான் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபோது, சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரையில் நான்குவழிச்சாலை அமைப்பது குறித்து பேசினேன். அவரும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நேர்மறையான எண்ணம் கொண்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் பா.ஜ.க. மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகுமார், பிரசார பிரிவு தலைவர் மகேசுவரன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், நகர தலைவர் சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.