பணமோசடி செய்த போலீஸ்காரர் கைது
மதுக்கடை உரிமம் வாங்கி தருவதாக பணமோசடி செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
தானே,
மும்பை எல்லோகேட் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் ஆனந்த் பிரசாத் பாண்டே. தானே காசர்வடவலி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருக்கு மதுக்கடை நடத்த உரிமம் வாங்கி தருவதாக கூறி, பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ் சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் ஆனந்த் பிரசாத் பாண்டேவை கைது செய்தனர். விசாரணையில் ரெயில்வேயில் வேலை, பிளாட்பாரங்களில் உணவகங்கள் நடத்துவதற்கான அனுமதி வாங்கி தருவதாகவும் பலரிடம் ரூ.85 லட்சம் வரையிலும் பணமோசடி செய்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 5 நாட்கள் போலீஸ் காவலில் ஒப்படைத்தனர்.