மதுரை விமான நிலையத்திற்கு பிளேடு வடிவில் தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
மதுரை விமான நிலையத்திற்கு பிளேடு வடிவில் 259 கிராம் தங்கத்தை கடத்தி வந்தவரை சுங்க புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.
மதுரை,
துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க புலனாய்வுத் துறையினருக்கு தகவல் வந்தது. இதைதொடர்ந்து மதுரை விமான நிலையத்திற்கு அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க புலனாய்வுத்துறை துணை கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த அபுதாகிர்(வயது 38) என்ற பயணி கொண்டு வந்த பொருட்களை சோதனை மேற்கொண்டனர். அதில் அவர் பிளேடை தங்கத்தில் செய்து, அதன் மீது அலுமினிய முலாம் பூசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் தங்க வளையங்களையும் கடத்தி வந்திருந்தார்.
அதை தொடர்ந்து அவரிடம் இருந்த 259 கிராம் தங்கத்தை, சுங்க புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்து அபுதாகிரை கைது செய்தனர்.