வேகத்தடை கோரி கிராம மக்கள் மறியல்

விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் வேகத்தடை அமைக்க கோரி மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-20 21:45 GMT
விருதுநகர்,

விருதுநகர் அருகே பெரியவள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண் விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் பெரியவள்ளிக்குளம் விலக்கில் ஒரு தனியார் பஸ்சில் ஏறிய போது தவறி விழுந்து காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து பெரிய வள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திருப்பதி தலைமையில் பெரியவள்ளிக்குளம் கிராம விலக்கில் வேகத்தடை அமைக்க கோரி மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்