எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்

மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் ஈடுபட்டனர்.

Update: 2018-02-20 21:45 GMT
மதுரை,

ரெயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் ரெயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை பணி நியமனம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மதுரை ரெயில்வே கோட்டத்தில் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் 583 பேர் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதனை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் நேற்று மதுரை ரெயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். ஓடும் தொழிலாளர்கள் பிரிவு செயலாளர் முருகானந்தம், டிராபிக் கிளை தலைவர் கணேஷ்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தை கோட்டத் தலைவர் ராமசுப்பு தொடங்கி வைத்தார். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. மாவட்ட செயலாளர் தளபதி, ம.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளர் அழகுசுந்தரம், கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., நன்மாறன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஜனதாதள மாநில பொது செயலாளர் ஜான்மோசஸ் உள்ளிட்டோர் பேசினர். உண்ணாவிரதத்தை கோட்ட செயலாளர் ரபீக் முடித்து வைத்தார். 

மேலும் செய்திகள்