யானைகள் தாக்கியதில் மாடு காயம்
உத்தனப்பள்ளி அருகே யானைகள் தாக்கியதில் மாடு காயம் அடைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் செய்ய திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சானமாவு, போடூர்பள்ளம் வனப்பகுதியில் 15 யானைகள் உள்ளன. இவை இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானைகள் நேற்று காலை உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு மீசைக்காரன்கொட்டாய் என்ற பகுதிக்கு சென்றன.
துரைசாமி என்ற விவசாயியின் வீட்டு அருகில் சென்ற யானைகள் அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளை தாக்க முயன்றது. அப்போது ஒரு மாடு அங்கிருந்து ஓடியது. மற்றொரு மாட்டை யானைகள் தாக்கின. இதில் மாட்டிற்கு வயிறு, கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது. பின்னர் யானைகள் சானமாவு காட்டிற்குள் சென்று விட்டன.
யானைகளால் மாடு தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும் சானமாவு கிராம மக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் யானைகளை விரட்டிட வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, சானமாவு கிராமத்தில் ராயக்கோட்டை சாலையில் பஸ் நிறுத்தம் முன்பு சாலை மறியல் செய்ய திரண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அதே போல சூளகிரி தாசில்தார் பெருமாள், ஓசூர் வனச்சரகர் சீதாராமன் ஆகியோரும் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
சம்பவ இடத்திற்கு வந்த வேப்பனப்பள்ளி தி.மு.க. எம்.எல்.ஏ. முருகன், யானைகளால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்து வருகின்றன. அதே போல ஆடு, மாடுகளும் தாக்கப்பட்டு வருகின்றன. எனவே அவற்றை கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதிக்கு விரட்டிட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வனத்துறையினரிடம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் செய்யும் முடிவை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.