கிருஷ்ணகிரி அணையின் பின்புறம் பள்ளங்கள் தோண்டி மண்எடுப்பு
கிருஷ்ணகிரி அணையின் பின்புறமாக பெரிய அளவில் பள்ளங்களை தோண்டி மண் எடுக்கப்பட்டு வருவதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அணையில் கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி, முதல் ஷட்டரில் உடைப்பு ஏற்பட்டது. அணையின் மதகை சீரமைக்க 1.40 டி.எம்.சி. தண்ணீர் வீணாக வெளியேற்றப்பட்டு, தற்காலிகமாக 12 அடி உயரத்திற்கு ஷட்டர் அமைத்து ‘சீல்‘ வைக்கப்பட்டது.
தற்போது அணையில் நீர்மட்டம் மிகவும் குறைந்ததால், அணையின் பின்புறம் ஒரு பகுதியில் வறண்டு காணப்படுகிறது. இந்த நிலையில் அணையையொட்டி உள்ள தின்னகழனி, வடுகம்பட்டி, கிராமங்களின் வழியாக அணையின் பின்புற பகுதியில் வறண்ட இடத்தில் பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டி, மண் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மண் எடுத்து பில்டர் மணல் தயாரித்து வருகிறார்கள். இது குறித்து தகவல் அறிந்ததும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.
இதையடுத்து உதவி கலெக்டர் அருண், தாசில்தார் கன்னியப்பன் மற்றும் அணையின் இளநிலை பொறியாளர் சையத், பணி ஆய்வாளர் அசோகன், தாலுகா போலீசார் அங்கு சென்றனர். அந்த நேரம் பில்டர் மணல் தயாரித்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதன்பின்னர் அந்த பகுதியில் பெரிய அளவில் தோண்டப்பட்டிருந்த 2 பள்ளங்களை பொக்லைன் எந்திரம் மூலமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அணையின் பின்புறமாக மண் தோண்டி எடுத்து, பின்னர் அதில் மோட்டார் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து பில்டர் மணல் தயாரித்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் மணல் கடத்தல் நடந்து வருகிறது. அதிகாரிகள் இங்கு கண்காணிக்க வேண்டும் என்றனர். அணையின் பின்புறம் பள்ளங்கள் தோண்டி மண் எடுக்கப்பட்டது குறித்து அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள்.