ஓ.பன்னீர்செல்வம் பேச்சுக்கு கருத்து தெரிவிக்க எடப்பாடி பழனிசாமி மறுப்பு
மோடி சொன்னதால் தான் அமைச்சரவையில் இணைந்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, அவர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.
சேலம்,
சேலத்தில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஓராண்டில் ஏராளமான திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலில் நடக்கும் இந்த அரசு, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. வருகிற 24-ந் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கான 50 சதவீத மானியத்தில் அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. ஓராண்டுக்கு 1 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும்.
காவிரி நதிநீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. நதிகளை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்து ஜனாதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும் என்ற உத்தரவை வரவேற்கிறேன். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து கூறியதாவது:-
கேள்வி: காவிரி நதிநீர் வழக்கில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படுமா?
பதில்: இன்னும் 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேல்முறையீடு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
கேள்வி: காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசுவீர்களா?
பதில்: ஏற்கனவே நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரதமரை சந்தித்த போது, தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து விளக்கி இருக்கிறேன். சென்னை வந்த மத்திய மந்திரி நிதின் கட்காரியிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு விவரத்தை முழுமையாக படித்த பின்னர், சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி பிரதமரை சந்திப்பது குறித்து முடிவெடுப்பேன்.
கேள்வி: பிரதமர் மோடி சொன்னதால் தான் தமிழக அமைச்சரவையில் இணைந்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது குறித்து?
பதில்: ஓ.பன்னீர்செல்வம் என்ன பேசினார் என்பது குறித்து முழுமையாக தெரியவில்லை. அதனால், அது குறித்து எதுவும் சொல்வதிற்கில்லை. முழுமையாக தெரிந்த பிறகு பதிலை தெரிவிக்கிறேன்.