வேலூர் கோட்டத்தில் தபால் அலுவலகம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் சேவை ‘திடீர்’ நிறுத்தம்
வேலூர் கோட்டத்தில் தபால் அலுவலகம் மூலம் மின்கட்டணம் செலுத்தும் சேவை திடீரென நிறுத்தப் பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
வேலூர்,
தபால்துறை பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதில் பொதுமக்கள் தங்களது மின்சார கட்டணத்தை தபால் நிலையங்களில் செலுத்தும் சேவையும் ஒன்றாகும். இதனால் பொதுமக்கள் பலர் தங்களது மின் கட்டணத்தை அந்தந்தபகுதிகளில் உள்ள தபால் நிலையங்களில் செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது வேலூர் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் மின் கட்டணம் பெறும் சேவை திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தபால் நிலையங்களுக்கு மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் பலர் ஏமாற்றத் துடன் திரும்பி செல் கின்றனர். அவர்கள் தற்போது மின்வாரிய அலுவல கங்களை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து வேலூர் தலைமை தபால் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
தபால் நிலையங்களில் பொதுமக்கள் தங்களது மின் கட்டணத்தை செலுத்தி வந்தனர். இந்த சேவை கடந்த மாதம் 23-ந் தேதியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் தபால் துறையில் தற்போது புதியதாக மென்பொருள் (சி.எஸ்.ஐ.) அறிமுகப் படுத்தப்பட்டு ள்ளது. அந்த மென்பொருளில் இதுவரை தபால்துறை வழங்கி வந்த அனைத்து சேவைகளும் உள்ளது. ஆனால் மின் கட்டண சேவை வசதி மட்டும் அதில் கிடையாது.
தமிழ்நாட்டில் நிர்வாக வசதிக்காக சென்னை பெருநகர மண்டலம், மத்திய மண்டலம் (திருச்சி), மேற்கு மண்டலம்(கோவை), தெற்கு மண்டலம் (மதுரை) என 4 மண்டலங்களாக தபால்துறை பிரிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருள் வேலூர், தர்மபுரி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்பட சுமார் 10 கோட்டங்களில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் அறிமுகப் படுத்தப்பட்ட கோட்டங்களில் பொதுமக்கள் மின் கட்டண சேவையை தபால் நிலையங் களில் பெற முடியாது.
மின் கட்டண சேவையில் ரூ.2 ஆயிரத்துக்கு 12 ரூபாய் தபால் துறைக்கு வருவாயாக கிடைத்தது. தற்போது அந்த வருவாய் தபால் துறைக்கு இழப்பாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.