பள்ளிக்கூட சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்த மாணவர்கள்
தூய்மை இந்தியா திட்டம் குறித்து பாளையங்கோட்டையில் பள்ளிக்கூட சுவரில் விழிப்புணர்வு ஓவியங்களை மாணவ-மாணவிகள் வரைந்தனர்.
நெல்லை,
தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள பாளையங்கோட்டை பஸ்நிலையம், வ.உ.சி.மைதானம் உள்ளிட்ட இடங்களில் அரசுக்கு சொந்தமான சுவர்களில் ஓவியம் வரைந்து அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் பல இடங்களில் வரையப்பட்டு சிறந்த ஓவியங்களுக்கு பரிசு வழங்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள காந்திமதி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தின் வெளிப்புற சுவரில் சுகாதாரம் குறித்து தூய்மை இந்தியா இயக்கம் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டினார்கள். இதில் கழிப்பறையை எப்படி சுத்தம் செய்யவேண்டும், கழிவு நீர் எப்படி செல்லவேண்டும் என்று ஓவியம் வரையப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர். இந்த நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழை, மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை இணை ஆணையாளர் நரேஷ் வழங்கினார்.