ஸ்கூட்டர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி பெண்களை தாக்கி 11 பவுன் சங்கிலி பறிப்பு
மன்னார்குடியில் ஸ்கூட்டர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி பெண்களை தாக்கி 11 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் அடுத்தடுத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மன்னார்குடி,
மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை கருவேப்பிள்ளை நத்தம் பகுதியை சேர்ந்த தமிழரசன். இவர் தஞ்சை மாநகராட்சியில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சீதாதேவி (வயது 36), மகன் அபிநவ் ஆகிய இருவரும் ஸ்கூட்டரில் மன்னார்குடி சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். லெக்கணாம்பேட்டை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், ஸ்கூட்டர் மீது மோதி சீதாதேவி மற்றும் அவரது மகன் அபிநவ்வை கீழே தள்ளி விட்டனர். அப்போது மர்மநபர்கள், சீதாதேவியை தாக்கி அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதேபோல மன்னார்குடி ருக்மணி குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கோமதிஜெயா (30). இவர் தனது குழந்தைகளுடன் ஸ்கூட்டரில் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், கோமதிஜெயா வந்த ஸ்கூட்டர் மீது மோதினர். இதில் குழந்தைகளுடன் கீழே விழுந்த கோமதி ஜெயாவை தாக்கி அவர் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் அடுத்தடுத்து பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே கும்பலாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.