திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்ட அவலம்
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் செயல்படாமல் கிடக்கும் வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்ட, போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளே திருடப்பட்டது அவலம் நடந்துள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு தினமும் 84 ரெயில்கள் வந்து செல்கின்றன. தற்போது பஸ்கட்டணம் அதிகரிக்கப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள் ரெயில்களிலேயே பயணம் செய்கின்றனர். தேனி மாவட்ட பயணிகள் பெரும்பாலானோர் திண்டுக்கல்லுக்கு வந்து அங்கிருந்து ரெயில்களில் சென்று வருகின்றனர்.
இதேபோல திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பயணிகள், தங்களது இருசக்கர வாகனங்களை திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு ரெயில்களில் சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வாகன காப்பகம் செயல்பட்டு வந்தது.
இதற்கிடையே வாகன காப்பகம் நடத்துவதற்கான ஏலத்தொகையை ரெயில்வே நிர்வாகம் பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால், யாரும் ஏலம் எடுக்காததால் திண்டுக் கல் ரெயில்நிலையத்தில் உள்ள வாகன காப்பகம் திறந்தே கிடக்கிறது. இங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்தால் மீண்டும் வாகனம் இருக்குமா? என்பது சந்தேகமே என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல் ரெயில்நிலைய வளாகத்தில் உள்ள வாகன காப்பகம் நகர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்டது. இங்கு கடந்த 3 மாதங்களில் மட்டும் 6 மோட்டார் சைக்கிள் கள் திருடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதில் ஒரு ரெயில்வே போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளும் அடங்கும்.
எனவே, ரெயில்வே நிர்வாகம் ஏலத்தொகையை குறைத்து வாகன காப்பகத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாகனங்கள் பல நாட்கள் நிறுத்தப்படுவதால் மழை, வெயிலில் பாதிக்கப்படுவதை தடுக்க மேற்கூரை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.