ஆன்-லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.16 லட்சம் மோசடி

ஆன்-லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.16 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2018-02-17 22:45 GMT
மும்பை,

ஆன்-லைன் திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்ணிடம் ரூ.16 லட்சம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் தேடிவருகின்றனர்.

திருமண தகவல் மையம்

மும்பை காந்திவிலியை சேர்ந்த 36 வயது பெண் கிராபிக் டிசைனர், வரன்தேடி ஆன்-லைன் திருமண தகவல் மையத்தில் தனது விவரத்தை பதிவு செய்து இருந்தார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமண தகவல் மையம் மூலமாக அறிமுகம் ஆனார்.

அந்த வாலிபர் கிராபிக் டிசைனரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்து இருந்தனர்.

ரூ.16 லட்சம் மோசடி

இந்தநிலையில் சமீபத்தில் அந்த வாலிபர், கிராபிக் டிசைனருக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான பரிசு பொருளை அனுப்பி உள்ளதாக கூறினார். பின்னர் வாலிபர், அவர் அனுப்பிய பரிசு பொருள் சுங்கத்துறையிடம் சிக்கிக்கொண்டதாகவும், அதை வாங்க சுங்க வரி செலுத்தவேண்டும் என கூறினார். இதை உண்மையென நம்பிய கிராபிக் டிசைனர், அந்த வாலிபர் கூறிய வங்கிக்கணக்கிற்கு ரூ.16 லட்சம் வரை அனுப்பினார். ஆனால் அவருக்கு எந்த பரிசு பொருளும் கிடைக்கவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், சம்பவம் குறித்து காந்திவிலி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருமண தகவல் மையம் மூலம் பழகி பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்டவரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்