மைசூரு- பெங்களூரு இடையே இரட்டை பாதையில் ரெயில் சேவை நாளை தொடக்கம் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்
பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் மைசூருவில் நாளை நடக்கும் விழாவில் மைசூரு-பெங்களூரு இடையிலான இரட்டை பாதையில் ரெயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.
மைசூரு,

பிரதமர் இன்று மைசூரு வருகை
பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் கடந்த 5-ந் தேதி பா.ஜனதா சார்பில் நடைபெற்ற பரிவர்த்தனா யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இந்த நிலையில், மைசூரு-பெங்களூரு இடையே புதிதாக இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை பாதையில் ரெயில் சேவையை தொடக்க விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மைசூருவுக்கு வருகிறார்.
இதற்காக இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவில் உள்ள மண்டஹள்ளி விமான நிலையத்திற்கு பிரதமர் வருகை தருகிறார். பின்னர் மைசூரு புறநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று இரவு பிரதமர் மோடி தங்க இருப்பதாக தெரிகிறது. நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணியளவில் மத்திய அரசின் ‘மன் கீ பாத்‘ என்னும் வானொலி நிகழ்ச்சியில் அவர் பேசுகிறார்.
புதிய இரட்டை ரெயில் பாதையை...
அதன்பிறகு, மதியம் 12.30 மணியளவில் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு கோமதேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் மகா மஸ்தகாபிஷேகத்தில் அவர் கலந்துகொள்கிறார். அங்கு அவர் பாகுபலிக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்துகிறார். பின்னர் ஹாசன் மாவட்டத்தில் இருந்து மதியம் 3.30 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகிறார். மைசூரு ரெயில் நிலையத்தில் வைத்து நடைபெறும் விழாவில் மைசூரு-பெங்களூரு புதிய இரட்டை ரெயில் பாதையில் ரெயில் சேவையையும், மைசூரு-உதய்பூர் இடையிலான புதிய ரெயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மேலும் மைசூரு அருகே நாகனஹள்ளி பகுதியில் உள்ள புதிய சேட்டிலைட் ரெயில் நிலையத்தையும் பிரதமர் திறந்து வைப்பதுடன், மைசூரு-பெங்களூரு இடையே அமைய உள்ள 8 வழி சாலைக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார். அதைத்தொடர்ந்து, மாலை 4 மணியளவில் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார்.
சித்தராமையாவுக்கு அழைப்பில்லை
இதற்கிடையில், மைசூருவில் மத்திய அரசு சார்பில் நடைபெற உள்ள புதிய ரெயில் தொடக்கம் மற்றும் இரட்டை பாதையில் ரெயில் சேவை தொடக்க விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொள்ள அழைப்பு விடுக்கவில்லை என்றும், அழைப்பிதழில் சித்தராமையா பெயர் அச்சிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. மத்திய அரசு விழா என்பதால் சித்தராமையாவை அழைக்கவில்லை என்ற தகவல் வெளியானது. ஆனால் பிரதமர் கலந்து கொள்ளும் விழா என்பதாலும், மாநில முதல்-மந்திரி என்பதாலும் ரெயில்வே துறை சார்பில் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் இருந்து மைசூருவுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை முதல்-மந்திரி சித்தராமையா வரவேற்க உள்ளதாக கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடியும், முதல்-மந்திரி சித்தராமையாவும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அவர்கள் 2 பேரும் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பலத்த பாதுகாப்பு
கர்நாடக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை தொடர்ந்து பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கர்நாடகத்திற்கு வருகைதர உள்ளதால், பா.ஜனதா கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். குறிப்பாக முதல்-மந்திரி சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் பலத்தை நிரூபிக்க தலைவர்கள் தீவிரம் காட்டியுள்ளனர்.
பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வருவதையொட்டி மைசூரு மற்றும் ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.