நள்ளிரவில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கும்பகோணம் அருகே, நள்ளிரவில் பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மாடாகுடி வெள்ளாள தெருவில் வசிப்பவர் ராமநாதன் மனைவி காந்திமதி (வயது55). ராமநாதன் ஏற்கனவே இறந்து விட்டார். காந்திமதி சம்பவத்தன்று இரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் அருகே யாரோ மர்ம நபர்கள் வந்து செல்லும் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த காந்திமதி வீட்டின் வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே சென்று பார்்த்துள்ளார்். ஆனால் அங்கு யாரும் இல்லை.
பின்னர் பக்கத்து வீட்டில் வசிக்கும் லதா என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது காந்திமதியை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியை அறுத்து எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டனர்.
வலைவீச்சு
இதனால் காந்திமதி திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்்களை தேடி வருகின்றனர்.