போதை பழக்கம் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாணவ - மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
உலக போதை பழக்கம் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போளூர், திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி நடந்தது.
போளூர்,
உலக போதை பழக்கம் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை ஒழிப்பு குறித்த பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை தாங்கினார். பொத்தரை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். நிகழ்ச்சியில் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் கலந்துகொண்டு மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர்.
9-ம் முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற மதுகுடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ - மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயவேல் நன்றி கூறினார்.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) நந்தகுமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.பாஸ்கரன், கே.ஆனந்தி, எம்.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. முதுகலை தமிழ் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகளை நடத்தினார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முன்னதாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
கீழ்பென்னாத்தூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி, விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.
ஊர்வலத்தில் மாணவர்கள், மதுபழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறு சென்றனர். மேலும் இதுகுறித்து துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.