சட்டமன்ற கூட்டத்தொடரின்போது டாஸ்மாக் பணியாளர்கள் சிறைநிரப்பும் போராட்டம்
மூடப்படும் டாஸ்மாக் கடையின் பணியாளர்களுக்கு பிற துறையில் உள்ள காலிப்பணியிடங்களில் நிரந்தர பணியிடம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைநிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட பேரவை கூட்டத்தில் மாநில செயலாளர் தனசேகரன் பேசினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் (ஏ.ஐ.டி.யு.சி) நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் வரதராஜன், பொருளாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் கோவிந்தராஜன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் தனசேகரன் கலந்து கொண்டு பேசியதாவது:-
“தமிழக அரசு படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவதாக கொள்கை முடிவை எடுத்து உள்ளது. தற்போது 2 கட்டங்களாக 500 மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. அந்த கொள்கை முடிவுப்படி வருங்காலங்களில் அரசு என்னென்ன செய்ய போகிறது என்ற வேலை அறிக்கையை வெளியிட வேண்டும்.
டாஸ்மாக் கடைகளை மூடும் போது அதில் பணியாற்றுக்கின்ற பணியாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் அரசின் பிற துறைகளில் உள்ள காலிபணியிடங்களில் நிரந்தர பணி வழங்கிட வேண்டும்.
டாஸ்மாக் பணியாளர்கள் பணி காலத்தில் இறந்தால் அவர்களது குடும்பத்தை சேர்ந்த வாரிசு ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். மேலாண்மை இயக்குனர் உத்தரவுப்படி பணி மூப்பு அடிப்படையில் விற்பனை தொகைக்கு ஏற்ப மது பானக்கடையில் பணி நிரவல் செய்ய வேண்டும் என நாங்கள் அரசை வலியுறுத்தி வருகிறோம்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரின்போது சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.