கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே அடையாளம் தெரியாத ஆண்பிணம்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையான சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைசேர்ந்தவர் என்பது தெரியவில்லை. உடலில் துணி எதுவும் இல்லாத நிலையில் போர்வையால் அவரது உடல் மூடப்பட்டு கிடந்தது. அவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஏதேனும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளியாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து கும்மிடிப்பூண்டி கிராம நிர்வாக அதிகாரி பாக்கிய சர்மா அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.