அரசு பள்ளி மாணவர்களுக்கு வேன் வழங்கி அசத்திய கிராம மக்கள்
கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி அரசு பள்ளிக்கு மாணவர்கள் சென்று வர கிராம மக்கள், இளைஞர்கள் வேன் ஒன்றை இலவசமாக வழங்கி அசத்தியுள்ளனர்.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி கிராமத்தில் 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்த 3 மாணவர்கள் மருத்துவர் களாகவும் மற்றும் பலர் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பல துறை அதிகாரிகளாக உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துள்ளது. மேலும் பள்ளியில் ஆசிரியர்கள் 4 பேருடன் கூடுதலாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் சிறப்பு ஆசிரியர்களும் பணி புரிந்து வருகின்றனர். கணினிகள் போன்ற வசதிகளும் உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் படிப்பு மட்டுமின்றி அறிவியல் ஆய்வுகள், விளையாட்டு போட்டிகளிலும் மாநில அளவில் சாதித்து வருகின்றனர்.
மேலும் சிதம்பரவிடுதி பகுதியில் இருந்து சுமார் 50 மாணவ, மாணவிகள் பல ஊர்களிலும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வேன்கள் மூலம் சென்று வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரவும் அரசு பள்ளியை தரம் உயர்த்தவும் திட்டமிட்ட முன்னாள் அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கிராம மக்கள் இணைந்து பள்ளிக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர். தற்போது தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் போல அரசு பள்ளி மாணவர்களும் பள்ளிக்கும், வீட்டுக்கு சென்று வரும் பொருட்டு கிராம மக்கள், முன்னாள் மாணவர்கள், வெளிநாடு வாழ் இளைஞர்கள் ஆகியோர் இணைந்து பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக வேன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பள்ளியில் நடந்த விழாவில் மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி குணசேகரனிடம், பொதுமக்கள் வேன் சாவியை வழங்கினார்கள். அவர் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திராவிடம் வேன் சாவியை வழங்கினார்.
வேன் வழங்கியது குறித்து முன்னாள் மாணவர்கள் துரைராசு, சுரேஷ் ஆகியோர் கூறும் போது, “இந்த பள்ளி 1973 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பள்ளி வளர்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள் இணைந்து பல்வேறு குழுக்கள் அமைத்து கண்காணித்து வந்தோம். அப்போது தான் மாணவர்களின் பெற்றோர்கள் ஆங்கில மோகத்தால் தான் தனியார் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புகிறார்கள் என்பது தெரிய வந்தது. அதனால் 5 கணினிகள் வாங்கி வகுப்பறையில் அமைத்தோம். தொடர்ந்து கணினிக்கு சிறப்பு ஆசிரியர், ஆங்கிலம் கற்பிக்க தனி ஆசிரியர் என்று 3 ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நியமித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு பலரும் இப்பகுதியில் இருந்து தனியார் பள்ளிக்கு வேனில் ஏறிச் செல்வதை ஏக்கத்துடன் அரசு பள்ளி மாணவர்கள் பார்த்துக் கொண்டே வந்தார்கள். அதனால் அவர்களின் ஏக்கத்தை போக்கவும் அரசு பள்ளிக்கு மாணவர்களை கொண்டு சேர்க்கவும் வேன் ஒன்றை இலவசமாக வழங்கி உள்ளோம்” என்றனர்.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரா மற்றும் ஆசிரியர் அருண் ஆகியோர் கூறும் போது, “மாணவர்கள் மீது பெற்றோர்கள் இளைஞர்கள், கல்விப்புரவலர்கள், மிகுந்த அக்கறை செலுத்துவதால் அனைத்து உதவிகளையும் உபகரணங்களையும் அவர்களே செய்து கொடுக்கிறார்கள். அதனால் எங்கள் பள்ளியில் படித்த மாணவர்கள் மேல் படிப்புகளில் சாதனை படைத்து வருகின்றனர்” என்றனர். மேலும் “ அரசு பள்ளியை தரம் உயர்த்த அரசு உதவியை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்காமல் கிராம மக்களே தனியார் பள்ளிக்கு இணையாக தரம் உயர்த்தி வருவது பாராட்டத்தக்கது” என மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி குணசேகரன் கூறினார்.