அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் அரசியல் ரீதியான உறவு கிடையாது அமைச்சர் பேட்டி
அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் அரசியல் ரீதியான உறவு கிடையாது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.
திருச்சி,
தமிழ்நாடு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்கள் இணையத்தின் மாநில மாநாடு, திருச்சி கலையரங்க மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு பொதுச்செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினார்.
மாநில தலைவர் மகாலிங்கம், பொருளாளர் நடராஜன், துணை செயலாளர் ரத்தினவேல் ஆகியோர் பேசினார்கள். சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
ஆவின் நிறுவனம் உண்மையாக உழைக்கக்கூடிய உழைப்பாளிகளை நம்பி உள்ளது. ஆவின்பால் தாய்ப்பாலுக்கு நிகரானது. தற்போது சிங்கப்பூரில் 50 இடங்களில் ஆவின்பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. துபாய், இலங்கை, ஹாங்காங் போன்ற நாடுகளிலும் ஆவின்பால் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் ஆவின்பாலை அந்த நாடுகளுக்கெல்லாம் அனுப்ப இருக்கிறோம்.
இந்த நிறுவனத்தை அழித்துவிடலாம் என சிலர் நினைத்தார்கள். ஆனால் அத்தனையையும் தாங்கிக்கொண்டு இந்த துறையை காப்பாற்றிய உங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல முடிவுகளை மானியக்கோரிக்கைக்கு முன்னரோ அல்லது பின்போ அறிவிப்போம். 4 வழிச்சாலைகள் உள்ள இடங்களில் ஆவின் ஹைடெக் பார்லர்களை திறக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் அமைச்சர் வளர்மதி, அரசு முதன்மை செயலாளர் கோபால், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை இயக்குனர் காமராஜ், துணை ஆணையர் சண்முகராஜ்குமார், தலைமையிட ஆணையர் அலுவலக துணைப்பதிவாளர் முனிராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாநில துணைத்தலைவர் மாணிக்கம் வரவேற்றார். முடிவில் மாநில துணைச்செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதால் தான் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் சேர்ந்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசி இருப்பது எதார்த்தமானது. நிர்வாக ரீதியாக பிரதமர் கூறுவதை நாங்கள் கேட்போம். பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் அரசாங்க ரீதியான உறவு தான் உள்ளது. ஆனால் அரசியல் ரீதியான உறவு கிடையாது.
பா.ஜ.க.வுடன் அரசியல் கூட்டணி அமைப்பது குறித்து, முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தான் முடிவு செய்வார்கள். காவிரி தீர்ப்பு குறித்து ரஜினியும், கமலும் தெரிவித்து இருப்பது அவர்களின் தனிப்பட்ட கருத்து. காவிரி தீர்ப்பு குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது. விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.