வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதில் மோசடி செய்ததாக புகார்: போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை
வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதில் மோசடி செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்,

ஏஜென்சி நடத்தி வந்தார்
நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மைப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் தாஜன் (வயது 26). இவர் திருச்சியில் இருந்து வெளிநாட்டுக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் ஏஜென்சி நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் தாஜன் மீது திருச்சி போலீசில் புகார் அளித்திருந்தனர்.
அந்த புகாரின் பேரில் திருச்சி போலீசார் விசாரணை நடத்த இருந்த நிலையில், போலீஸ் விசாரணைக்கு பயந்து கரிவலம்வந்தநல்லூர் அருகே ரெட்டியபட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தாஜன் வந்து இருந்தார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தாஜனின் தந்தை சுந்தர்ராஜன் அளித்த புகாரின் பேரில், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.