தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
அரசு பொதுத்தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும்போது தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் விவேகானந்தன் அறிவுறுத்தினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வை 22,001 மாணவ-மாணவிகளும், பிளஸ்-1 பொதுத்தேர்வை 20,476 மாணவ-மாணவிகளும், எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வை 22,624 மாணவ-மாணவிகளும் எழுதுகிறார்கள். இந்த பொதுத்தேர்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வு பணியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 3,500 பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர் ஆகியோர் மூலம் தேர்வுப்பணிக்கான ஆணைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய போலீசார், வினாத்தாள் பெறப்பட்ட நாள் முதல் தேர்வுகள் முடியும் வரை பாதுகாப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு நடைபெறும்போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிக்கவும், வெளி ஆட்கள் தேர்வு மையத்திற்குள் அத்துமீறி நுழையாமல் இருக்கவும் போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும்போது தேர்வு மையங்களுக்கும், வினாத்தாள் கட்டு காப்புமையம், விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதை மின்வாரிய அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் மற்றும் விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் பாதுகாப்பு உபகரணங்களுடன் 24 மணி நேரமும் தீத்தடுப்பு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
தேர்வுகள் நடைபெறும் நாட்களில் தேர்வு மையங்கள் வழியாக பஸ்கள் நின்று செல்வதை வட்டார போக்குவரத்து அலுவலர் உறுதிசெய்யவேண்டும். பஸ் வசதி இல்லாத இடங்களில் இருந்து தேர்வுகள் எழுத வரும் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையங்களுக்கு செல்ல தேவையான பஸ் வசதியை போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்படுத்தி தர வேண்டும். தேர்வு மையங்களுக்கான அடிப்படை வசதிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி, மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் பழனிசாமி, உதவிதிட்ட அலுவலர் சீனிவாசன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடாசலம், மாவட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி, தாசில்தார்கள் சேதுலிங்கம், சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.