போலீசாருக்கு ‘கிலி’ ஏற்படுத்திய ‘புலி’!
ஸ்காட்லாந்தில் ஒரு பொம்மை புலி, போலீசார் உள்ளிட்டோருக்கு கிலி ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்காட்லாந்தின் அபெர்டீன்ஷர் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் புலி ஒன்று காணப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து ஆயுதமேந்திய போலீசார் அங்கு அனுப்பப்பட்ட நிலையில், அது உண்மையான புலியல்ல எனத் தெரியவந்தது.
குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது பண்ணையின் மாட்டுக் கொட்டகையில் புலி ஒன்றை பார்த்ததாக பதற்றத்துடன் போலீசுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே பல வாகனங்களில், ஆயுதமேந்திய போலீசார் ஹேட்டன் அருகில் இருக்கும் அந்தப் பண்ணைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், அருகில் உள்ள வன உயிரின பூங்காவைத் தொடர்புகொண்ட போலீசார், அங்கு புலி ஏதேனும் தப்பியுள்ளதா என்றும் விசாரித்துள்ளனர்.
அப்படி எந்தப் புலியும் தப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பிட்ட புலியை ஜாக்கிரதையுடன் நெருங்கிய போலீசார், அது நிஜப் புலி போன்ற தோற்றம் கொண்ட பொம்மைப் புலி என்று அறிந்து கொஞ்சம் ஏமாற்றம் கலந்த நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இது வழக்கத்துக்கு மாறான புகார் என்றாலும் பொதுமக்களுக்கு அபாயம் ஏற்படுத்துவதாகக் கருதப்படும் எந்த ஒரு விஷயம் தொடர்பான அழைப்பும் தீவிரமாக எடுத்துகொள்ளப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் கார்டினர் கூறினார்.
மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் ஆயுதமேந்திய போலீசாரை சம்பவ இடத்துக்கு அனுப்புவது ஒரு வழக்கமான நடைமுறை என்றும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான நடவடிக்கைகள் சுமார் 45 நிமிடங்களுக்குள் முடிவுக்கு வந்ததாகவும், தவறான தகவல் என்றாலும், நல்ல நோக்கத்துடன்தான் அந்தப் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் ஜார்ஜ் கூறினார்.
பொம்மைப் புலியை யாரும் தெரியாமல் போட்டுவிட்டுப் போனார்களா அல்லது வேண்டுமென்றே விட்டுச் சென்றார்களா எனத் தெரியவில்லையே!