தஞ்சையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை வழியாக தொடர்ந்து இயக்க வலியுறுத்தி தஞ்சையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்,
மன்னார்குடியில் இருந்து தஞ்சை, கும்பகோணம் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் மார்ச் 1-ந் தேதி முதல் திருவாரூர் வழியாக இயக்கப்பட இருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சை, கும்பகோணம் வழியாக தொடர்ந்து இயக்க வலியுறுத்தியும், மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்றுவழியில் இயக்கப்பட்டால் தஞ்சையில் இருந்து சென்னைக்கு புதிய ரெயில் இயக்க கோரியும் அனைத்து கட்சி மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிங்காரவடிவேலு தலைமை தாங்கினார். மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநகர தி.மு.க. செயலாளர் நீலமேகம், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் முருகேசன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா ரவி, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், தி.க. மாவட்ட தலைவர் அமர்சிங், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பு மாவட்ட தலைவர் பாண்டியன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் கணேசன், தமிழர் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி தஞ்சை, பாபநாசம், கும்பகோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களை சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.