சிங்கபெருமாள்கோவில் அருகே மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது

புதுக்கோட்டையில் இருந்து மது பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சிங்கபெருமாள்கோவில் அருகே கவிழ்ந்தது.

Update: 2018-02-16 22:00 GMT
வண்டலூர்,

புதுக்கோட்டையில் இருந்து லாரி ஒன்று மதுக்கடைகளுக்கு வினியோகம் செய்யும் மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. சிங்கபெருமாள்கோவில் அருகே திருக்கச்சூர் சாலையில் உள்ள வளைவில் லாரி திரும்பும் போது திடீரென சாலையோரம் உள்ள பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மது பாட்டில்கள் பள்ளத்தில் விழுந்தது. இதில் சில மதுபாட்டில்கள் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்து காரணமாக சிங்கபெருமாள்கோவில்-திருக்கச்சூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்