ஈரோடு மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் 1,500 பேர் வேலை நிறுத்தம்
ஈரோடு மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் 1,500 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
ஈரோடு,
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவை தொகையை முழுமையாக வழங்க வேண்டும். கால நிலை பதவி உயர்வை உத்தரவாதப்படுத்த வேண்டும். மின்வாரிய துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நேற்று மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பி.எம்.எஸ்., சி.ஐ.டி.யு., என்.எல்.ஓ உள்ளிட்ட மின் தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த 1,500 மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் தங்களுடைய வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
ஈரோடு மண்டலத்தில் உள்ள ஈரோடு, கோபி, நாமக்கல், மேட்டூர், சேலம் ஆகிய மின் பகிர்மான வட்டத்தில் பணி புரியும் களப்பணியாளர்கள், கணக்கீட்டாளர்கள், ஒயர்மேன், லைன்மேன், போர்மேன், அலுவலர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதனால் மின் கட்டணம் வசூலிக்கும் பணி, மின் பழுது நீக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து மின் தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூறும்போது, ‘காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. இதனால் மின் வாரியத்தில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்’ என்றனர்.