விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விசைத்தறி தொழிலாளர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-02-16 22:15 GMT
குமாரபாளையம்,

விசைத்தறி தொழிலில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் 75 சதவீத கூலி, சம்பள உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட சி.ஐ.டி.யூ. விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ‘கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் குமாரபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீத கூலி உயர்வும், 2015 மே 10-ம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பள்ளிபாளையம் பகுதியில் 21.5 சதவீத கூலி உயர்வும் வழங்க உடன்பாடு ஏற்பட்டது. ஒப்பந்த காலம் முடிந்து 10 மாதம் ஆகிவிட்டது. எனவே அரசு இதில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து, 2016-17-ம் ஆண்டு 25 சதவீத போனஸ் கோரிக்கையை தீர்த்து வைக்க கோரியும், மே தினம் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு 9 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, இ.எஸ்.ஐ., பி.எப்., பஞ்சப்படி தினம் ரூ.175 வழங்க வேண்டும், ஒவர்சிப்ட் முறையை ரத்து செய்ய வேண்டும். பவர்லூம் பேக்டரிகளில் சுத்தமான குடிநீர், கழிப்பிடம், முதலுதவி வசதி ஆகியவை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் சம்மேள உதவி தலைவர் சுப்ரமணியன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வேலுசாமி, மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட பொருளாளர் மோகன் தனபால் உள்ளிட்ட சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்