கோவை மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் 1500 பேர் வேலை நிறுத்தம்
கோவை மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்கள் 1500 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வசூல் மையங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
கோவை,
ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள சி.ஐ.டி.யு., பி.எம்.எஸ். ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை.
இதன் காரணமாக மின்கட்டண வசூல் மையங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வேலை நிறுத்தம் காரணமாக கோவை டாடாபாத்தில் உள்ள மின்வாரிய அலுவலக வசூல் மையத்தில் 3 கவுண்ட்டர்களில் 2 கவுண்ட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. திறக்கப்பட்டு இருந்த ஒரு கவுண்ட்டரில் பொதுமக்கள் வரிசையில் காத்து நின்று மின்கட்டணங்களை செலுத்தினார்கள். சில இடங்களில் மின்மாற்றியில் (டிரான்ஸ்பாரம்) ஏற்பட்ட பழுது உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். சிலர் மின்சார இணைப்பு தொடர்பாக ஊழியர்களை சந்திக்க அலுவலகம் சென்றபோது அங்கு, அவர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். மேலும் மின்கம்பத்தில் ஏற்பட்ட சிறிய பழுதை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. இதுகுறித்து சி.ஐ.டி.யு. கோவை மண்டல செயலாளர் மதுசூதனன் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் மின்வாரிய அலுவலகத்தில் மொத்தம் 6,500 பேர் பணியாற்றி வருகிறார்கள். நேற்று நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு. மற்றும் பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தை சேர்ந்த 1,500 பேர் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக வயல்வெளிகள் மற்றும் சில இடங்களில் அறுந்து விழுந்த மின்சார ஒயரை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை.
டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்ததும் அதிகபட்சமாக அரை மணி நேரத்துக்குள் சரிசெய்து விடுவார்கள். ஆனால் நேற்று குறைந்தது 3 மணி நேரம் ஆனது. ஒருசில கிராமங்களில் இருக்கும் மின்சார வசூல் மையத்தில் ஊழியர்கள் இல்லாததால் அவை மூடப்பட்டன.
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துதான் நாங்கள் போராட்டத்தை தொடங்கினோம். எங்கள் கோரிக்கைகளை அமைச்சர் நிறைவேற்ற உறுதி அளித்துள்ளார் என்பதால் ஒருவாரம் பார்ப்போம். அதன் பின்னர் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடலாம் என்று மற்ற தொழிற்சங்க நிர்வாகிகள் கூறினார்கள். இதையடுத்து நேற்று ஒருநாள் மட்டும் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். நாளை (இன்று) வழக்கம்போல பணிகளுக்கு செல்வோம். ஏற்கனவே அமைச்சர் அறிவித்து உள்ளதுபோன்று ஒருவாரத்துக்குள் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.