நெல்லை மாவட்டத்தில் மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தம்- பணிகள் பாதிப்பு
நெல்லை மாவட்டத்தில் மின்சார ஊழியர்கள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.
நெல்லை,

வேலை நிறுத்தம்
ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை மாவட்டத்தில் நேற்று மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
பாளையங்கோட்டை மகராஜநகரில் உள்ள மின்சாரவாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் உள்ளிட்ட பல மின்சார வாரிய அலுவலகங்களில் குறைந்த அளவு ஊழியர்கள் வந்ததால், பணிகள் பாதிக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மகராஜ நகர் மின்சாரவாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சி.ஐ.டியு. மாவட்ட செயலாளர் பீர்முகமது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் வண்ணமுத்து, கந்தசாமி, கிருஷ்ணன், ராஜா, சந்தானமாரிமுத்துராஜா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
10 தொழிற்சங்கங்கள்
இதில், சி.ஐ.டி.யு., பாரதியமின் தொழிலாளர் சங்கம், மின்ஊழியர் காங்கிரஸ், மின்வாரிய அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், மின்வாரிய அனைத்து பொறியாளர் சங்கம், அம்பேத்கர் பணியாளர்கள் சங்கம், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை, பட்டாளி தொழிற் சங்க பேரவை உள்பட 10 தொழிற்சங்கங்கள் பங்கேற்று உள்ளன.
அ.தி.மு.க., தொ.மு.ச. பேரவை சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. பல இடங்களில் மின்சார சேவை மையங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மின் கட்டணத்தை செலுத்தினர்.