அரசு சட்டக் கல்லூரியில் மாதிரி நீதிமன்ற கூடம் நாராயணசாமி திறந்து வைத்தார்

அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மாதிரி நீதிமன்ற கூடம் மற்றும் மாணவர்கள் மையத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று திறந்து வைத்தார்.

Update: 2018-02-16 01:03 GMT
காலாப்பட்டு,

புதுச்சேரியை அடுத்த பெரிய காலாப்பட்டில் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் புதிதாக மாணவர்கள் மையம், வங்கி, தபால் மையம், உணவு விடுதி ஆகியவை கட்டப்பட்டுள்ளன. அவற்றின் திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது.

விழாவுக்கு அமைச்சர்கள் கமலக்கண்ணன், ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மையம், வங்கி, தபால் மையம், உணவு விடுதி ஆகியவற்றை திறந்து வைத்தார். மேலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மாதிரி நீதிமன்ற போட்டிகளில் பங்கேற்று வாதிடுவதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாதிரி நீதிமன்ற கூடத்தையும் முதல்-அமைச்சர் நாராயணசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். விழாவில் புதுச்சேரி அரசு தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், கல்வித்துறை செயலாளர் அன்பரசு, உயர் கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயணரெட்டி மற்றும் காலாப்பட்டு தொகுதி காங்கிரஸ் செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்