பெங்களூருவில் ஏ.டி.எம்.களில் இருந்து பணம் கையாடல் செய்த தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் கைது
பெங்களூருவில் ஏ.டி.எம்.களில் இருந்து பணத்தை கையாடல் செய்த தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில் ஏ.டி.எம்.களில் இருந்து பணத்தை கையாடல் செய்த தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பணம் கையாடல்
பெங்களூரு கொத்தனூர் போலீசார் கடந்த 10-ந் தேதி நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது வேகமாக சென்ற ஒரு ஆட்டோவை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆட்டோவின் பின்பக்க இருக்கைக்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கு உரிய எந்த ஆவணங்களும் ஆட்டோவில் இருந்த 2 பேரிடமும் இல்லை. இதையடுத்து, 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர்கள் ராமமூர்த்திநகரை சேர்ந்த சதீஸ்(வயது32), ஆட்டோ டிரைவர் சுனில்குமார்(24) என்று தெரிந்தது. இவர்களில் சதீஸ் ஈஜிபுராவில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரம்பும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இதனால் சில தனியார் வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரங்களின் சாவிகள் சதீசிடம் இருந்தது. இதனை தனக்கு சாதமாக பயன்படுத்தி கொண்ட அவர், அந்த சாவி மூலம் ஏ.டி.எம். எந்திரங்களை திறந்து பணத்தை கையாடல் செய்வதை தொழிலாக வைத்திருந்தார்.
3 பேர் கைது
அதாவது காலையில் ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று, அங்கு பணம் நிரப்பிவிட்டு வரும் சதீஸ், இரவில் அங்கு சென்று, தனக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்வார். சதீசுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை ஏ.டி.எம். மையங்களில் நிரப்பிவிட்டாரா? என்று அதிகாரிகள் ஓரிரு நாட்கள் கழித்து பார்க்க செல்வது வழக்கம். அப்போது வேறு ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை எடுத்து வந்து, தான் ஏற்கனவே பணத்தை எடுத்து சென்றிருந்த ஏ.டி.எம்.-ல் சதீஸ் வைத்து விடுவார். இதனால் சதீஸ் மீது அதிகாரிகளுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.
ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து திருடும் பணத்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளார். கொத்தனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அவர்களிடம் சதீஸ் சிக்காமல் இருந்திருந்தால், இந்த சம்பவத்தை தொடர்ந்து அரங்கேற்றி வந்திருப்பார். இதையடுத்து, சதீஸ், சுனில்குமார் கைது செய்யப்பட்டார்கள். சதீசுக்கு உடந்தையாக இருந்த மஞ்சுநாத்தும் கைது செய்யப்பட்டு உள்ளார். கைதான 3 பேரிடம் இருந்தும் ரூ.6 லட்சம் ரொக்கம், ஒரு ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை
பெங்களூரு நகரில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் கட்டாயமாக காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்றும், கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகளை வங்கிகள் சரியாக கடைப்பிடிப்பதில்லை. இதன் காரணமாகவே ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிப்பது, ஊழியர்களாலேயே பணம் கையாடல் செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பெங்களூரு போலீசார் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், தங்களது கருத்துகளை பெங்களூருவில் உள்ள வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தனர். வங்கி அதிகாரிகள் இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் கூறினார்.
முன்னதாக கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகளை போலீஸ் கமிஷனர் சுனில் குமார் பார்வையிட்டார்.